செய்திகள்
திருமலை ஏழுமலையான் கோவில்

திருப்பதி கோவில் சொத்துக்கள் விற்பனை விவகாரம்- அறங்காவலர் குழு இன்று ஆலோசனை

Published On 2020-05-28 05:51 GMT   |   Update On 2020-05-28 05:51 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோ​விலுக்கு தமிழக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 23 சொத்துக்கள் உட்பட 50 சொத்துக்களை  பொது ஏலத்தில் விட்டு விற்பனை செய்யும் முடிவுக்கு மாநில அரசு தடை விதித்தது. ஏலம் விடும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மடாதிபதிகள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தி இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை கூறி உள்ளது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், கோவில் சொத்துக்கள் விற்பனை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடும்படி  தமிழக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டியின் கோரிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News