செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை

Published On 2020-05-27 10:32 GMT   |   Update On 2020-05-27 10:32 GMT
திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
திருமலை:

கொரோனா ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது நிறுத்தப்பட்டது. ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள் வழக்கமான முறையில் நடந்து வருகிறது.

3-ம் கட்ட ஊரடங்குக்கு பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஊரடங்கு 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

31-ந்தேதிக்கு பின்னர் தளர்வுகள் வந்தால். தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்துகின்றனர்.

கூட்டத்தில் தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தால் சமூக இடைவெளியுடன் தினமும் எவ்வளவு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது அவர்களுக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் மருத்துவ பரிசோதனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News