செய்திகள்
முதல்-மந்திரி எடியூரப்பா

கர்நாடகாவில் 1-ந் தேதி முதல் கோவில்கள் திறப்பு : முதல்-மந்திரி எடியூரப்பா

Published On 2020-05-27 09:35 GMT   |   Update On 2020-05-27 09:35 GMT
கர்நாடக மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கி இருந்தது. அதேபோல கர்நாடக மாநிலத்திலும் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து, தொழிற்சாலை இயங்க அனுமதி உள்பட சில தளர்வுகளை அந்த மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் ஆலோசனைக் கூடடம் நடந்தது.



கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி மற்றும் தலைமை செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சலூன்கள், கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஆட்டோ, பஸ்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

கோவில்களை திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் கோவில்களில் பூஜை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வருகிற 1-ந் தேதி முதல் தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 கோவில்களில் இந்த வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக இது விரிவுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News