செய்திகள்
போக்குவரத்து நெரிசல்

டெல்லி-காசியாபாத் எல்லை மூடப்பட்டது- கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2020-05-27 04:38 GMT   |   Update On 2020-05-27 04:38 GMT
கொரோனா தாக்கம் காரணமாக டெல்லி-காசியாபாத் எல்லை மூடப்பட்டதால் வாகனங்கள் இரு புறமும் நகர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
காசியாபாத்:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 4337 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லி 4வது இடத்தில் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி டெல்லியில் மொத்தம் 14465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7223 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 288 பேர் பலியாகி உள்ளனர். புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி-காசியாபாத் (உ.பி.) எல்லை நேற்று மீண்டும் மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கையை காசியாபாத் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து எந்த வாகனமும் உத்தர பிரதேசம் நோக்கி செல்ல முடியவில்லை. இதனால் காசிபூர் அருகே இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News