செய்திகள்
டி.கே.சிவக்குமார், யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசம் யோகி ஆதித்யநாத்தின் சொந்த சொத்து அல்ல: டி.கே.சிவக்குமார் காட்டம்

Published On 2020-05-27 03:25 GMT   |   Update On 2020-05-27 03:25 GMT
உத்தரபிரதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உத்தரபிரதேசம் அவரது சொந்த சொத்து அல்ல என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை வேறு மாநிலங்கள் வேலைக்கு எடுத்தால், அதற்கு மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரபிரதேசம் அவரது சொந்த சொத்து அல்ல. உத்தரபிரதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

உத்தரபிரதேச மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல உங்களின் அனுமதி தேவை இல்லை. அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்ய உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சி செய்வதற்கான அடிப்படை விதிகள் கூட யோகி ஆதித்யநாத்துக்கு தெரியவில்லை. பொது அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். அவரின் இந்த பேச்சால், அந்த மாநில தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பா.ஜனதாவுக்கு எது வசதியாக இருக்கிறதோ, அப்போது ஒரே நாடு என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு எது பொருத்தமாக இல்லையோ, அப்போது இந்தியா பல்வேறு மாநிலங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ளதாக கூறி வேறு மாதிரி கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.”

இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News