செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Published On 2020-05-26 19:14 GMT   |   Update On 2020-05-26 19:14 GMT
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை என உச்சநீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்தது. 

இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
Tags:    

Similar News