செய்திகள்
யோகி ஆதித்யநாத்

ரத்தம், வியர்வை சிந்தி மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்களை மராட்டிய அரசு ஏமாற்றி விட்டது: யோகி ஆதித்யநாத்

Published On 2020-05-24 16:54 GMT   |   Update On 2020-05-24 16:54 GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப மகாராஷ்டிர அரசு உதவி புரியவில்லை என்று யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு தழுவிய பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

பொது முடக்கம் முதலில் 21 நாட்கள், அதன்பின் 19 நாட்கள் என நீண்டதால் தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்தே சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்தனர். இதில் பலர் பசி, விபத்தால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது.

இறுதியாக மே1-ந்தேதியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

மகாராஷ்டிர அரசு வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு திரும்ப போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாக சிவசேனா-காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில் ‘‘மகாராஷ்டிர மாநிலத்தை தங்களது ரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டமைத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிவசேனா-காங்கிரஸ் அரசால் வஞ்சகம் செய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாக்டவுன் காலத்தில் தாங்களாகவே தங்களை காப்பாற்றிக் கொண்டனர். தற்போது வலுக்கட்டாயமாக மாநிலத்தை விட்டு வெளியே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை மனிதநேயம் ஒருபோதும் மன்னிக்காது’’ என்றார்.
Tags:    

Similar News