செய்திகள்
தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் (கோப்பு படம்)

அந்தந்த பள்ளிகளிலேயே சி.பி.எஸ்.இ. தேர்வு - மத்திய மந்திரி தகவல்

Published On 2020-05-21 05:33 GMT   |   Update On 2020-05-21 05:33 GMT
அந்தந்த பள்ளிகளிலேயே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதற்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கிருமிநாசினி திரவத்தை வெளிப்படையான பாட்டிலில் கொண்டு வரலாம். முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஹால் டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளை தவறாமல் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News