செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா

Published On 2020-05-19 07:37 GMT   |   Update On 2020-05-19 07:37 GMT
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஸ்ரீநகரின் ஹப்பா கடல் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு காதில் ஏற்பட்ட அலர்ச்சி நோய்க்கு, அங்குள்ள ஸ்ரீமகாராஜ ஹரிசிங் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.



இதையடுத்து அங்குள்ள மார்பக நோய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் 4 பேருக்கு தான் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆஸ்பத்திரியின் மார்பக நோய் பிரிவு துறைத் தலைவர் நவீத் நசீர் ஷா கூறுகையில், கொரோனா பாகுபாடு பார்ப்பது இல்லை. அது யாரையும் விட்டு வைக்காது. அதனால் சுகாதார பணியில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சேவையில் ஈடுபடுங்கள் என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News