செய்திகள்
உத்தவ் தாக்கரே

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் - மராட்டிய முதல் மந்திரி வேண்டுகோள்

Published On 2020-05-18 18:53 GMT   |   Update On 2020-05-18 18:53 GMT
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புனே:

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்து 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்து உள்ளது.  7 ஆயிரத்து 688 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், வீடு திரும்பி உள்ளனர்.

இந்த சூழலில், புலம்பெயர் தொழிலாளர்கள் மராட்டியத்திற்கு திரும்பும் முனைப்பில் உள்ளனர்.  மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று கூறும்பொழுது, இதுவரை மும்பையில் 19 ஆயிரத்து 967 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  அவர்களில் 5 ஆயிரம் பேர் குணமடைந்து சென்று விட்டனர்.

நாங்கள் 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஊர் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.  அவர்களுக்காக ரெயில்கள் மற்றும் பேருந்துகளை தயார்படுத்தி வைத்துள்ளோம்.

அதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News