செய்திகள்
சிபிஎஸ்இ

9, 11-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Published On 2020-05-15 03:13 GMT   |   Update On 2020-05-15 03:13 GMT
9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கருத்தில் கொண்டு, அசாதாரண சூழ்நிலையின் ஒருமுறை நடவடிக்கையாக, 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்ததா, முடிவுகள் வெளியிடப்பட்டதா அல்லது அவர்களின் தேர்வுகள் முடிக்கப்படவில்லையா? என எதுவும் இதில் பொருட்படுத்தப்படாது.

இதற்காக பள்ளிகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது புதுமையான சோதனைகளை நடத்தலாம். இந்த சோதனையின் அடிப்படையில் அடுத்த நிலையை தீர்மானிக்கலாம். மாணவர்கள் தோல்வியுற்ற அனைத்து பாடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படலாம். தேர்வை நடத்துவதற்கு முன், பள்ளிகள் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு நேரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News