செய்திகள்
ஏக்நாத் கட்சே

எம்.எல்.சி. ‘சீட்’ கிடைக்காததற்கு மாநில பாஜக தலைவர்கள் சதியே காரணம்: ஏக்நாத் கட்சே

Published On 2020-05-13 03:31 GMT   |   Update On 2020-05-13 03:31 GMT
தனக்கு எம்.எல்.சி. ‘சீட்’ மறுக்கப்பட்டதற்கு மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் சிலரது சதி தான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா பாரதீய ஜனதாவில் இருந்து ஓரங்கப்பட்டு வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். வருகிற 21-ந் தேதி நடைபெறும் எம்.எல்.சி. தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்த அவர், தனக்கு ‘சீட்’ கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஆனால் அவருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. இதனால் ஏக்நாத் கட்சே மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார். கொரோனா பிரச்சினைக்கு பின்னர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக ஏக்நாத் கட்சே தெரிவித்தார்.

இந்தநிலையில், தனக்கு எம்.எல்.சி. ‘சீட்’ மறுக்கப்பட்டதற்கு மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் சிலரது சதி தான் காரணம் என அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Tags:    

Similar News