செய்திகள்
ராகுல் காந்தி

பிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2020-05-09 19:36 GMT   |   Update On 2020-05-09 19:36 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்படும் பிரதமர் நிவாரண நிதியை முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பல்வேறு தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பல்வேறு அமைப்புகள் நிதி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்படும் பிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நிவாரண நிதிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ரெயில்வே உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் நிதி வழங்கி உள்ளன.

இவற்றை முறையாக தணிக்கை செய்வது அவசியம். கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News