செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா அறிகுறி மிதமான பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் காத்திருக்க தேவையில்லை- சுகாதாரத்துறை

Published On 2020-05-09 07:18 GMT   |   Update On 2020-05-09 07:18 GMT
கொரோனா வைரஸ் அறிகுறி மிதமான பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் காத்திருக்க தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

புதுடெல்லி:

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு 2 கட்ட சோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

அதில், “லேசான அறிகுறி உள்ளவர்கள் 3 நாட்களுக்குள் காய்ச்சல் வரவில்லை என்றால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம், வீடு திரும்பிய நபர் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.

மிதமான பாதிப்பு உள்ளவர்கள் ஆக்சிஜன் உதவி தேவையில்லை என்றால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம். அவர்கள் மறு பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிகளில் காத்திருக்க தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய வேண்டும். தீவிரமாக பாதிக்கப்பட்டோரை மீண்டும் பி.சி.ஆர். சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News