செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே

20 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்: சுகாதார மந்திரி நம்பிக்கை

Published On 2020-05-09 03:31 GMT   |   Update On 2020-05-09 03:31 GMT
மும்பையில் 20 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மும்பை :

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனாவுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையும் தள்ளாடி வருகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மும்பை நகரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைசெயலாளர் லாவ் அகர்வாலுடன் இணைந்து ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனை கூட்டத்தில் மும்பையின் அனைத்து வார்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில், வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் அகர்வால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் முறையாக விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், அவர்களுக்கு சோதனை மற்றும் முறையான சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

தற்போது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் அடுத்த 15 முதல் 20 நாட்களில் மும்பையில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறையும் என உறுதி அளிக்கிறேன். பணியை துரிதப்படுத்த ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மற்ற துறைகளை சேர்ந்தவர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பு பணிக்காக நிதி பற்றாக்குறை ஏதுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News