செய்திகள்
ராகுல் காந்தி - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம்

Published On 2020-05-07 03:21 GMT   |   Update On 2020-05-07 03:21 GMT
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் பொருளாதாரரீதியாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் விலையை குறைப்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பது நியாயமல்ல. இந்த வரிஉயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

துயரமான காலகட்டத்தில், மக்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமே தவிர, மக்களை நசுக்கவோ, பணம் பறிக்கவோ கூடாது.

மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக மக்களிடமிருந்து பணம் பெறுவது மிகவும் குரூரமானது.

பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் கடன் வாங்க வேண்டும். அதை விடுத்து, பொருளாதாரம் முடங்கி இருக்கும்போது வரிச்சுமையை உயர்த்தக்கூடாது.

பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்போது புதிய வரிகள் விதிப்பதும், வரியை உயர்த்துவதும்தான் நியாயமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வரியை உயர்த்துவது மக்களை மேலும் வறுமையில் தள்ளும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News