செய்திகள்
திருப்பதி ஏழுமலையான்

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட ஏழுமலையான் பட்டு வஸ்திரங்கள்

Published On 2020-05-06 12:06 GMT   |   Update On 2020-05-06 12:06 GMT
சிறப்பு அனுமதியுடன் சேலத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு 8 பட்டு வஸ்திரங்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பதி:

ஊரடங்கையொட்டி திருப்பதியில் கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள் எவ்வித குறைபாடுமின்றி நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் நடத்தப்பட்டு புதிய பட்டு வஸ்திரம் அணிவிப்பது வழக்கம்.

இதற்காக பிரத்யேகமாக சேலத்தில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் தயார் செய்யப்படுகிறது.

ஊரடங்கால் சேலத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள் திருப்பதி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஏழுமலையானுக்கு அணிவிக்க 2 பட்டு வஸ்திரங்கள் மட்டுமே உள்ளன.

இதனால் சேலத்தை சேர்ந்த நிறுவனத்திடம் பட்டு வஸ்திரங்களை அனுப்பி வைக்க தேவஸ்தான அதிகாரிகள் கேட்டனர். ஆனால் ஊரடங்கு உள்ளதால் பட்டு வஸ்திரங்களை கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி மூலம் பட்டு வஸ்திரங்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

8 பட்டு வஸ்திரங்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி பெற்றுக்கொண்டார். இந்த வஸ்திரங்கள் ஜூன் மாதம் வரை பயன்படுத்த போதுமானவை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News