செய்திகள்
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு - இங்கிலாந்து இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2020-04-23 07:21 GMT   |   Update On 2020-04-23 07:21 GMT
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஹெலிகாப்டர் பேர ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழங்கில் இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிறையில் மிக அதிகமான கூட்டம் இருப்பதாவும், இதனால் 59 வயதான தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாவும், இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.



இந்த மனுவை கடந்த 11-ந் தேதி டெல்லி
ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கிறிஸ்டியன் மிசெல் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர், டெல்லி அரசு நியமித்துள்ள உயர்மட்ட குழு வகுத்துள்ள விதிமுறையின் அடிப்படையில் இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News