செய்திகள்
ரோஜா

ஊரடங்கு உத்தரவை மீறி குடிநீர் தொட்டியை திறந்து வைத்த நடிகை ரோஜா

Published On 2020-04-22 11:06 GMT   |   Update On 2020-04-22 11:06 GMT
நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஊரடங்கு நிபந்தனைகளை மீறி குடிநீர் தொட்டி திறந்து வைத்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருமலை:

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் தவிர மற்ற பணிகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது. ஆந்திராவில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஊரடங்கு நிபந்தனைகளை மீறி நேற்று புத்தூரில் குடிநீர் தொட்டி திறந்து வைத்தார்.

இதையொட்டி புத்தூரில் நடிகை ரோஜா நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கு வரிசையில் நின்றிருந்த பெண்கள் அவரை மலர்தூவி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளி விலகலாக இடம் விட்டு நகர்ந்து நின்றனர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

இருந்தாலும் தற்போதைய நிலையில் நிபந்தனைகளை மீறி குடிநீர் தொட்டியை திறந்து வைத்த எம்.எல்.ஏ. ரோஜாவின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News