செய்திகள்
தனது சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ

கொரோனா நிவாரணத்துக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வை தொலைபேசியில் அழைத்து மோடி பாராட்டு

Published On 2020-04-21 06:21 GMT   |   Update On 2020-04-21 06:21 GMT
தனது சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் ஜுனகத் மாவட்டத்தில் உள்ள பில்கா நகரை சேர்ந்தவர் ரத்தனபாய் தும்மர் (வயது 99). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்க விரும்பினார்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஜுனகத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று தனது சேமிப்பு பணமான ரூ.51 ஆயிரத்தை வழங்கினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘எனது வயது காரணமாக தேசத்திற்கு உடல் ரீதியாக எந்த உதவியையும் செய்ய முடியாது என்பதால் எனது சேமிப்பு பணத்தை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன்’’ என கூறினார்.

இந்த நிலையில் ரத்தனபாய் தும்மர் தனது சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கியது பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

3 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த உரையாடலின் போது, ‘‘இந்த வயதில் நீங்கள் நல்ல வேலை செய்கிறீர்கள். உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’’ என ரத்தனபாய் தும்மரிடம் மோடி கூறினார்.

Tags:    

Similar News