செய்திகள்
பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நாட்டில் பணப்புழக்கம் மேம்படும்- பிரதமர் மோடி

Published On 2020-04-17 08:47 GMT   |   Update On 2020-04-17 08:47 GMT
ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்பால் நாட்டில் மக்களிடையே பணப்புழக்கம் மேலும் மேம்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜி20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும். மேலும் இன்றைய அறிவிப்பால் நாட்டில் மக்களிடையே பணப்புழக்கம் மேலும் மேம்படும்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அனைத்து மாநிலங்களும் கடன் பெறுவதற்கான வழிகள் அதிகரிக்கும். சிறு வணிகம், சிறு, குறு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பெரிதும் பயனளிக்கும்

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். 
Tags:    

Similar News