செய்திகள்
ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.75 சதவீதமாக குறைப்பு- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

Published On 2020-04-17 06:09 GMT   |   Update On 2020-04-17 13:11 GMT
கொரோனாவால் நாடு கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஊரடங்கு காலத்தின் நாட்டின் மின்சார தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இணையதள சேவை மற்றும் பணப்பரிவர்த்தனை பெரிய சரிவை சந்திக்கவில்லை.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ) எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக தொடரும். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தில் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதாவது, ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆர்பிஐ, வங்கிகளுக்கு போதிய ரூபாய் நோட்டுக்களை தந்துள்ளது. பாதிப்புகளை சரிசெய்வதற்காக மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News