செய்திகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஓ.டி.பி.யை பகிர வேண்டாம்- எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிறுவனம் எச்சரிக்கை

Published On 2020-04-10 07:23 GMT   |   Update On 2020-04-10 07:23 GMT
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்து உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வருமானம் இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ.களை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

இதன்படி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ( எஸ்.பி.ஐ.) அனைத்துவித கடன்களுக்கும் 3 மாத இ.எம்.ஐ தள்ளி வைப்பு குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டது.

இந்த நிலையில் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களிடம் இ.எம்.ஐ. தள்ளிவைப்பு தொடர்பாக புதிய ஓ.டி.பி மோசடி நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் டுவிட்டரில் கூறியதாவது;

சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வழிகளில் மோசடியை தொடங்கி விட்டனர். இது மாதிரியான மோசடியாளர்கள் கடன் இ.எம்.ஐ தள்ளிவைப்பு பற்றி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) பெறுகிறார்கள். ஒரு முறை ஓ.டி.பி.யை பகிர்ந்தால் அவர்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதனால் உங்களது ஒ.டி.பி.யை யாருடனும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News