செய்திகள்
பிரதமர் மோடி

5 நிமிடம் கைதட்ட சொல்லி புதிய பிரசாரம்: என்னை சர்ச்சையில் சிக்க வைக்க முயற்சிப்பதா? - பிரதமர் மோடி கண்டனம்

Published On 2020-04-09 11:46 GMT   |   Update On 2020-04-09 11:46 GMT
பிரதமர் மோடியை கவுரவிக்க 5 நிமிடம் எழுந்து நின்று கைதட்டுமாறு நடக்கும் பிரசாரத்துக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடியை கவுரவிக்க 5 நிமிடம் எழுந்து நின்று கைதட்டுமாறு நடக்கும் பிரசாரத்துக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னை சர்ச்சையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளுக்காக, அவரை கவுரவிக்கும் வகையில், வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும் 5 நிமிடம் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று ஆன்லைனில் ஒரு பிரசாரம் நடந்து வருகிறது.



இதற்கு பிரதமர் மோடி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை கவுரவிக்க 5 நிமிடம் எழுந்து நின்று கைதட்டுமாறு ஒரு பிரசாரம் நடந்து வருவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அது சிலரின் நல்லெண்ணமாக இருக்கலாம்.

முதல் பார்வையிலேயே, இது மோடியை சர்ச்சையில் சிக்க வைக்க முயற்சிக்கும் குறும்பு போல் தோன்றுகிறது.

உங்களுக்கு மோடி மீது பாசம் இருக்குமானால், மோடியை கவுரவிக்க விரும்பினால், ஒரு ஏழை குடும்பத்தின் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம், இந்த கொரோனா பிரச்சினை முடியும்வரையாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.

எனக்கு அதை விட பெரிய கவுரவம் வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
Tags:    

Similar News