செய்திகள்
கட்டுமான தொழிலாளர்

31 மாநிலங்களில் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வினியோகம் - மத்திய அரசு தகவல்

Published On 2020-04-09 11:18 GMT   |   Update On 2020-04-09 11:18 GMT
31 மாநிலங்களில் சுமார் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் ரூ.6 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, சுமார் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு ஆகியவை காரணமாக இந்த பணம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
Tags:    

Similar News