செய்திகள்
வருமானவரி

சரக்கு மற்றும் சேவை வரி - வருமானவரி நிலுவை தொகை ரூ.18ஆயிரம் கோடி திரும்ப வழங்க நிதித்துறை திட்டம்

Published On 2020-04-09 10:37 GMT   |   Update On 2020-04-09 10:37 GMT
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான வருமானவரி நிலுவை தொகை ரூ.18ஆயிரம் கோடி திரும்ப வழங்கப்பட உள்ளதாக மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கூடுதலாக செலுத்திய, நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரியையும் உடனடியாக திரும்ப வழங்க மத்திய நிதித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக ரூ.5 லட்சம் வரை உள்ள தொகைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயன் பெறுவார்கள். அதேபோல் நிலுவையில் உள்ள அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் பெறப்பட்ட வரிப்பணத்தையும் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் வணிக நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வரை திரும்ப வழங்கப்பட உள்ளன.

மேற்கண்ட தகவலை மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News