செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

Published On 2020-04-05 11:43 GMT   |   Update On 2020-04-05 11:43 GMT
இந்தியாவில் 274 மாவட்டங்களில் 3374 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை 3 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில் ‘‘இந்தியாவில் 274 மாவட்டங்கள் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றில் இருந்து தற்போது வரை 472 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 79 பேர் பலியாகியுள்ளனர். நேற்றில் இருந்து 11 பேர் பலியாகியுள்ளனர். 267 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின்போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் கடைபிடித்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை திருப்திகரகமாக உள்ளது’’ எனத்தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News