செய்திகள்
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பணியில் ஈடுபடும் போலீசை தாக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் - உத்தரபிரதேச அரசு

Published On 2020-04-04 12:32 GMT   |   Update On 2020-04-04 12:32 GMT
ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசை தாக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் முசாபர்நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கின்போது வெளியே நடமாடிய நபர்களை கண்டித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இதை கருத்திற்கொண்டு, ஊரடங்கை அமல்படுத்தும் போலீஸ் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிலர் ஊரடங்கை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். மக்கள் வெளியே வருவதை தடுத்து தங்கள் கடமையை செய்யும் போலீசாரை தாக்குகின்றனர். அதை தடுப்பதற்காக, இம்முடிவு எடுக்கப்ட்டுள்ளது” என்றார்.
Tags:    

Similar News