செய்திகள்
பயோ சூட் எனப்படும் விசேஷ கவச உடை

கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து டாக்டர், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க விசேஷ கவச உடை

Published On 2020-04-04 07:20 GMT   |   Update On 2020-04-04 07:20 GMT
கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து டாக்டர், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க பொதுத்துறை நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. ‘பயோ சூட்’ எனப்படும் விசேஷ கவச உடையை தயாரித்துள்ளது.
பாலசோர்:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு, பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ‘பயோ சூட்’ எனப்படும் விசேஷ கவச உடையை தயாரித்துள்ளது.

இந்த உடை, தற்போது பல கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஆயிரக்கணக்கில் இந்த உடைகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் டி.ஆர்.டி.ஓ. ஒப்பந்தம் செய்துள்ளது. நாள்தோறும் 15 ஆயிரம் கவச உடைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News