செய்திகள்
கொச்சியில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் மக்கள்

கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் மக்களை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது அரசு

Published On 2020-04-04 06:03 GMT   |   Update On 2020-04-04 06:03 GMT
ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டு மக்கள் 112 பேர், சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொச்சி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில் ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் நாட்டவர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கொச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமிகள் நீக்கப்பட்டன. 
Tags:    

Similar News