செய்திகள்
கோப்புப்படம்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்

Published On 2020-04-03 06:31 GMT   |   Update On 2020-04-03 06:31 GMT
சத்தீஸ்கரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர்
ராய்ப்பூர்:

கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர்.

இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி தங்கள் குழந்தைகளுக்கு மறு பெயரிடலாம் என்று கூறினர்.

இந்த இரண்டு சொற்களும் மற்றவர்களின் மனதில் அச்சத்தையும் பேரழிவையும் உருவாக்ககூடும். ஆனால் ராய்ப்பூர் தம்பதியினர் தங்கள் இரட்டை குழந்தைகளான ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் கஷ்டங்களை வென்றெடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் கொரோனா- கோவிட் என பெயரிட்டு உள்ளனர்.

குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா கூறியதாவது:-

மார்ச் 27 அதிகாலையில் நான் இரட்டையர்கள், ஒரு பையன் மற்றும் ஒரு பெண்ணை பெற்றேடுத்தேன். நாங்கள் அவர்களுக்கு இப்போது கோவிட் (பையன்) மற்றும் கொரோனா (பெண்) என்று பெயரிட்டுள்ளோம்,
"பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு பிரசவம் நடந்தது. எனவே, நானும் என் கணவரும் அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினோம். அதனால் இந்த பெயர்களை வைத்தோம். தொற்றுநோய் மக்களை சுகாதாரம், மற்றும் பிற நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News