செய்திகள்
கோப்புபடம்

டெல்லியில் 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-03 05:00 GMT   |   Update On 2020-04-03 05:00 GMT
டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட டாக்டர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டரான அவருடைய கணவரும் பரிசோதனை மேற்கொண்டார். முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.

மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் 48 வயது பெண் டாக்டர் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதை ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்த இவருடைய கணவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாநில புற்றுநோய் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட டாக்டர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு மட்டுமே கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுடைய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News