செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்

Published On 2020-04-02 09:59 GMT   |   Update On 2020-04-02 09:59 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் நாளை வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகின்றனர் .
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச  துணைநிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இருந்து நாளை வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகின்றனர்  என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி இன்று மதியம் வீடியோ  கான்பரன்சில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News