செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்டவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மனைவி

திருவனந்தபுரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மனைவி

Published On 2020-04-02 04:06 GMT   |   Update On 2020-04-02 04:06 GMT
திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை மனைவி வீட்டுக்குள் விட மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் :

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் படாதபாடு படுகிறது. அதே சமயத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக சில குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக கருத்தும் பரவி வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் ஒரு குடும்பத்தை பிரித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்.

பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க அவருடைய மனைவி மறுத்து விட்டார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா வைரஸ் தாக்கம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடை விதித்து விட்டார். இதனால் அந்த நபர் வீட்டுக்கு செல்ல முடியாததால், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதிபடுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று வராது. இதுதொடர்பாக கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News