செய்திகள்
வீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஏற்றி ஊர்வலம்

வீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஏற்றி ஊர்வலம்: கிராம பஞ்சாயத்து அதிரடி

Published On 2020-04-02 03:04 GMT   |   Update On 2020-04-02 03:04 GMT
மாநில அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, ஒருவர் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார் என்று தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது.
மும்பை :

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் சிலர் கொரோனாவின் கோரப்பசி தெரியாமல் வெளியில் சுற்றுகின்றனர். இதை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கேஜ் தாலுகாவில் உள்ள தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மாநில அரசின் உத்தரவை மீறி, தெருக்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி தெருக்களில் சுற்றி முதல் முறையாக சிக்கும் நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து 3 முறை ஒருவர் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார். பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News