செய்திகள்
வைரல் புகைப்படம்

ஊரடங்கின் போது போலீஸ்காரருக்கு ஏற்பட்ட நிலை - வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2020-03-30 04:44 GMT   |   Update On 2020-03-30 04:44 GMT
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பணியில் இருந்த போலீஸ்காரர் தாக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் நாடு முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடியவர்கள் போலீசார் கொடூரமாக தாக்குவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

தற்சமயம், இவற்றுக்கு முற்றிலும் மாறான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் போலீஸ் அதிகாரியை ஒருவர் கொடூரமாக தாக்குகிறார். வைரல் புகைப்படங்களில், உரடங்கின் போது போலீசார் அத்துமீறல்களுக்கான முடிவு இது தான் என்றவாக்கில் தலைப்பிடப்பட்டு இருக்கிறது.  மேலும் மக்களின் நிலையை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படங்களுக்கும் தற்போதைய ஊரடங்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இணையத்தில் ரிவர்ஸ் சர்ச் செய்ததில், ஜூன் 2017 இல் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தி குறிப்பு காணக்கிடைத்தது.



அதில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கடும் கோபத்துடன் போலீசாரை தாக்குகிறார். உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே தகவல் அடங்கிய மேலும் சில செய்தி குறிப்புகளும் இணையத்தில் கிடைக்க பெற்றன.

அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் சமீபத்திய ஊரடங்கின் போது எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News