செய்திகள்
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு

Published On 2020-03-29 15:18 GMT   |   Update On 2020-03-29 15:18 GMT
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், பலியின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மெதுவாக அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், மார்ச் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மளமளவென அதிகரித்து விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டி 1024 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று புதிதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அம்மாநிலத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 20 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 50 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், பீகாரில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News