செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

Published On 2020-03-29 05:11 GMT   |   Update On 2020-03-29 05:11 GMT
கொரோனா வைரஸ் அச்ச்சுறுத்தலால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கணக்கை நாள்தோறும் பெருக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 979 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அச்ச்சுறுத்தலால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 979 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News