செய்திகள்
கோப்பு படம்

'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்

Published On 2020-03-29 01:05 GMT   |   Update On 2020-03-29 01:05 GMT
’பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்மி வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
பெங்களூரு:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 900-க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த முஜீப் முகமது தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார். 

அவர் தனது பேஸ்புக் பக்கதில், '' கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரசை பரப்புவோம்’’ என கருத்து பதிவிட்டிருந்தார்.



அவரது கருத்து சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து,சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை இன்போசிஸ் நிறுவனம் பணி நேற்று பணி நீக்கம் செய்துள்ளது.
Tags:    

Similar News