செய்திகள்
கொரோனா பாதுகாப்பு பணியில் ஊழியர்

துபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2020-03-28 09:17 GMT   |   Update On 2020-03-28 09:17 GMT
துபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா பரவல் அதிகரிப்பு 100 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்குள் இந்த நோய் அதிகம் பரவ காரணமானவர்கள் யார்? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதற்காக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வாளர் டாக்டர் அனுபம் சின்ஹா ஆய்வில் ஈடுபட்டார்.  இவரது ஆய்வில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளானாவர்கள் பற்றிய பட்டியலை தயாரித்தார்.

இதில் துபாயில் இருந்து 720 பேர் இந்தியா வந்திருப்பதும், அவர்களில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.

துபாயில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் நோய் பாதிப்பு அதிகம் இருக்க காரணம் என்ன? என்றும் அவர் ஆய்வு செய்தார். ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் செல்வோர் துபாய் வழியாகவே செல்வது தெரியவந்தது.

துபாய் விமான நிலையத்தில் இவர்கள் காத்திருப்பதும், அங்கிருந்து விமானத்தில் இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதும் தெரியவந்தது. விமான நிலையத்தில் காத்திருப்பவர்கள் மற்றும் இந்த விமானங்களில் பயணம் செய்தவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதுபோல இந்தியாவில் கொரோனா நோயால் இறந்தவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்களே என்றும் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆண்கள் இறப்பு விகிதம் 60 சதவீதமாகவும், பெண்கள் இறப்பு விகிதம் 40 சதவீதமாகவும் உள்ளது.

இறப்பவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் இதே நிலையே காணப்படுகிறது. இது 6.25 சதவீதமாக உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News