செய்திகள்
கொரோனா வைரஸ்

கேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Published On 2020-03-28 07:18 GMT   |   Update On 2020-03-28 14:53 GMT
கேரளாவில் கொச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். கேரளாவில் 170 மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கோரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News