செய்திகள்
கொரோனா சிறப்பு வார்டு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-03-28 05:56 GMT   |   Update On 2020-03-28 05:56 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 873 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவது 2ம் நிலையில் உள்ள நிலையில், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 873 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இவர்களில் 825 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகா 55, குஜராத் 53, ராஜஸ்தான் 48, தெலங்கானா 48, உத்தரபிரதேசம் 45, டெல்லி 39, பஞ்சாப் 38, தமிழ்நாடு 38, ஹரியானா 33, மத்திய பிரதேசம் 30, காஷ்மீர் 18, மேற்கு வங்கம் 15, லடாக் 13, ஆந்திரா 14, பீகார் 9,  சண்டிகர் 7, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் 5, கோவா 3, இமாச்சல பிரதேசம் 3, ஒடிசா 3, அந்தமான் 2, மணிப்பூர் 1, மிசோரம் 1, புதுச்சேரி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட79 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News