செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகாவில் பா.ஜனதா எம்.பி. மகளுக்கு கொரோனா தாக்கம் உறுதி

Published On 2020-03-26 10:35 GMT   |   Update On 2020-03-26 10:35 GMT
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. மகளின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. கிட்டேஸ்வரா. இவரது மகள் அஸ்வினி. இவர் கயானா நாட்டில் இருந்து கடந்த 21-ந்தேதி பெங்களூரு திரும்பி இருக்கிறார். கயானாவில் இருந்து நியூயார்க், டெல்லி வழியாக பெங்களூர் வந்து சேர்ந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டில் இருந்த அஸ்வினி சந்தேகத்தின் பேரில் தனது ரத்த மாதிரியை பரிசோதனைக்காக கொடுத்துள்ளார்.

அதை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறும் போது, ‘அஸ்வினியின் பயண தகவல்கள் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை’ என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆனால் கிட்டேஸ்வரா எம்.பி.கூறும் போது, ‘தனது மகளுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அனைவரும் குடும்பத்தோடு கயானாவில் இருந்து ஊர் திரும்பியதாகவும், வீட்டுக்கு வந்தது முதல் அவர்களை தனிமைபடுத்தி வைத்து இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போது அஸ்வினி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் உள்பட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் எம்.பி.யின் வீட்டை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுகு “ரெட் அலர்ட்” பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News