செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தாக்குதல்- மாநில அரசுகளுக்கு உதவ தயார் நிலையில் ராணுவம்

Published On 2020-03-26 10:23 GMT   |   Update On 2020-03-26 10:23 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உதவுவதற்கு அனைத்து மாநிலங்களிலும் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள ராணுவங்கள் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு மலேசியாவில் இருந்து ஏர்ஆசியா விமானத்தில் வந்த பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல ராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் தடுப்பு முகாம்களை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆவடியில் உள்ள ராணுவ ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கொரோனா நோயாளிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு ஒரு லட்சம் முக கவசம் மற்றும் சீருடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள மருத்துவ பிரிவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடனடியாக சென்று உதவுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமையகம் உத்தரவிட்டு இருக்கிறது.

இதேபோல ரெயில்வே துறையும் கொரோனா பாதுகாப்புக்கான வசதிகளை செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள லோகோசெட்டில் கொரோனா, கிருமி நாசினி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு வழக்கமாக 10 லிட்டர் அளவிற்கு தயாரிக்கப்படும். தற்போது 100 லிட்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News