செய்திகள்
135 கிலோ மீட்டர் நடந்தே சென்ற மராட்டிய வாலிபர்

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த மராட்டிய வாலிபர்

Published On 2020-03-26 10:22 GMT   |   Update On 2020-03-26 10:22 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் சாப்பிட உணவு கூட இல்லாமல் 135 கிலோ மீட்டர் நடந்தே தினக்கூலி வாலிபர் ஒருவர் சொந்த ஊரை அடைந்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு எண்ணிக்கை 135-ஐ தொட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மகாராஷ்டிரா அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது. வாகனங்கள் ஏதும் ஓடாததால் அங்குள்ள மக்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் நாக்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தற்போது வேலை இல்லாததால் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியு செய்தார். வாகனம் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊரை அடைய வேண்டும் என எண்ணி, நடக்க ஆரம்பித்தார். சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் சாப்பிடுவதற்கு உணவின்றி நடந்தே சொந்த ஊரை அடைந்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து அச்சப்படாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பீதியால் பெரும்பாலானோர் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.
Tags:    

Similar News