செய்திகள்
முதல் மந்திரி நவீன் பட்நாயக்

கொரோனா நோயாளிகளுக்காக ஒடிசாவில் உருவாகும் பிரமாண்ட மருத்துவமனை

Published On 2020-03-26 10:20 GMT   |   Update On 2020-03-26 10:20 GMT
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக, ஒடிசா மாநிலத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை உருவாகி வருகிறது.
புவனேஷ்வர்:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக, ஒடிசா மாநிலத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை உருவாகி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக ஒடிசாவில்தான் இந்த பிரமாண்ட மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News