செய்திகள்
டாக்டர்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published On 2020-03-26 08:53 GMT   |   Update On 2020-03-26 08:53 GMT
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான நிவாரண திட்டங்களை அறிவித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கும்போது அவர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில் இன்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

ஒருவேளை துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.
Tags:    

Similar News