செய்திகள்
தற்கொலை (மாதிரி படம்)

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்த அரசு பஸ் டிரைவர்

Published On 2020-03-26 07:33 GMT   |   Update On 2020-03-26 07:33 GMT
கொரோனா குறித்த பயத்தின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் டிரைவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் நார்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண மதிவாலா (வயது 56). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின்  அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தனக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதம் போலீசுக்கு கிடைத்துள்ளது. அதில், தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும், வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு கொரோனா இருப்பதாகவும் அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் நண்பர் ஒருவரிடம் கோபாலகிருஷ்ணா கூறியதாக அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர். 

அவர் தற்கொலை செய்துகொண்டது, குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News