செய்திகள்
கோப்பு படம்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது - மத்திய மந்திரி

Published On 2020-03-25 21:43 GMT   |   Update On 2020-03-25 21:43 GMT
கொரோனாவை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் தேசிய நெடுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்காலிகமாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 606 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், மருத்துவ வாகனங்களை தவிர அனைத்து போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் தேசிய நெடுச்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் (டோல்கேட்) தற்காலிகமாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்கவே டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News