செய்திகள்
கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-03-23 13:44 GMT   |   Update On 2020-03-23 13:44 GMT
கேரளா மாநிலத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 428 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்ததாகவும் இவர்களில் 4 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதால் தற்போதைய நிலவரப்படி அங்கு 91 பேர் சிறப்பு கண்காணிப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்ட 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 2  பேர் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்ற இருவர் பத்தினம்திட்டா மற்றும் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News